திட்டமிடுதல்
இப்பாடப் பகுதியின் உள்ளடக்கம் ‘துப்பறிவாளர்கள்: தேவனுடைய இராஜ்ஜியத்தை வேவு பார்த்தல்’ - இப்பாடங்கள் நற்பலன் தர பலவித உபகரணங்களை பயன்படுத்துகிறீர்கள்.
1. ஆசிரியருக்காக
முக்கியப்பாடப்பகுதிகளும், ஆலோசனைகளும், ஆசிரியர்கள்வகுப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுபவைகள்.
2. விளையாட்டு
உலகெங்குமுள்ள மாணவர்களில் 90 பேர் வகுப்பறைகளில் சலிப்புடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மாணவர்கள் சலிப்படையாதிருக்க விளையாட்டுகள் உதவுகின்றன. விளையாடும்போது அவர்கள் இங்குமங்கும் அசைவதோடு, பாடத்தையும் கற்றுக்கொள்ள முடியும்.
3. பாடஉதவிகள்
வாரந்தோறும் வீட்டிலிருந்து நீங்கள் கொண்டுவரும் பொருட்கள் உங்கள் பாடப்பகுதியின் சுவையை மிகைப்படுத்தும்.
4. கேள்விகள்
உயர்வகுப்பு மாணவருக்கு கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. உவமைகளை அவர்கள் எவ்வளவாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதை அறிய உதவுகின்றன.
5. விடைகள்
மாணவர்களின் புத்தகத்தின் ஒவ்வொரு பாடத்தின் வலப்புற பக்கங்களில் கேள்விகளுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மாணவர் புத்தகங்கள்
மாணவரின் கவனத்தை ஈர்க்கவும் பாட நேரங்களை கவர்ச்சிகரமாக்கவும் புத்தகம் உறுதுணையாயுள்ளன. புத்தகத்தில் பின்கண்ட பயிற்சிகள் உள்ளன.
- வேதாகமப் பகுதி - மாணவர் கையேட்டிலே வேதாகமப் பகுதி எழுதப்பட்டுள்ளது. எனவே வகுப்பிலுள்ள அனைவரும் அதை வாசிக்க முடியும்.
- மனப்பாடவசனம்.
- புதிர்
- இரகசிய செய்தி (பெரிய மாணவருக்கு மட்டும்) - குறிவிலக்கியைப் பற்றிய குறிப்புகளைப் பின்பற்றி ஒவ்வொரு வாரமும் பயன்படுத்தவும். ஒவ்வொருவருக்கும் குறிவிலக்கி உள்ளதா என்பதை கவனிக்கவும்.
- மத்தேயு நற்செய்தி நூலை வாசித்தல் (பெரிய மாணவர் மட்டும்) - வேத புத்தகத்தை இன்னும் அதிகமாக வாசித்தறிவதற்கென இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரத்திற்கு 2, 3 அதிகாரங்கள் அடங்கும்படி மத்தேயு நற்செய்தி நூல் பகுக்கப்பட்டுள்ளதால் 13 வாரங்களுக்குள் இந்த நூலை வாசித்து முடிக்க முடியும். இவ்வாறு வாசிக்க மாணவர்களை ஆசிரியர் ஊக்குவிக்க வேண்டும்.
இரகசிய செய்தியும் குறிவிலக்கியும் 
கடினமான மற்றும் மிகவும் கடினமான புத்தகங்களை உபயோகிக்கும் மாணவர்களுக்கு
மாணவர் புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திலும் இரகசிய செய்தி உள்ளது. மேலும் அறிய குறிவிலக்கிப் பக்கத்தைப் பார்க்கவும். குறிவிலக்கி
வெட்டி ஒட்டுதல்
நடுநிலையானது மற்றும் எளிதானது புத்தகங்களை உபயோகிக்கும் மாணவர்களுக்கு

ஸ்டிக்கர்கள் சிறுவர்களுக்குப் பிரியம்! எனவே வாரந்தோறும் ஸ்டிக்கர்களை வெட்டி ஒட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. புள்ளியிட்ட பகுதிக்குள் படங்கள் ஒட்டப்பட்டு, வண்ணம் தீட்டப்படவேண்டும். பதிவிறக்கம்: ஸ்டிக்கரை (pdf, 1.9 எம்பி)