கடினமான மற்றும் மிகவும் கடினமான புத்தகங்களை உபயோகிக்கும் மாணவர்களுக்கு
மாணவர் புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திலும் இரகசிய செய்தி உள்ளது. குறிவிலக்கி திறவுகோல் மாணவர் புத்தகங்களின் (பெரிய மாணவர்களுக்கு மட்டும்) கடைசி பக்கத்தில் உள்ளது. கத்தரிக்கோலால் திறவுகோல் பகுதியை வெட்டி எடுக்கவும். 13 வாரங்களிலும் அவ்வாறு செய்யவும். அது 3 மாதம் பத்திரமாயிருக்கும்படி கண்ணாடித்தாளால் புத்தகத்தை அலங்கரிக்கவும். சிறுவர்கள் அதை வீட்டிற்குக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டாம். ஏனெனில் அது 13 வாரமும் பயன்பாட்டிலிருக்க வேண்டிய ஒன்று.
இரகசிய செய்தியை அறிய திறவுகோலிலிருந்து நீங்கள் எதிர்நோக்கும் படத்தை நோக்கி அம்புக்குறியிடவும் (வலப்புறமுள்ள மாதிரியை நோக்கவும்) உங்கள் மாணவரின் புத்தகத்திலுள்ள அம்புக்குறி விடையைச் சுட்டிக்காட்டும்.
சொற்றொடரைக் கண்டுபிடித்தல்
ஒவ்வொரு பாடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு எழுத்து மறைந்துள்ளது. சிறுவர்கள் அந்த எழுத்தைக் கண்டு பிடித்ததும் தங்கள் திறவுகோல் மூலம் குறியீடு செய்து கொள்ள வேண்டும். பின்னர் முதல் பக்கத்திலுள்ள அடைப்பு பெட்டியில் அந்த எழுத்தை எழுதி வைக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் சொற்றொடரின் ஒவ்வொரு எழுத்தும் சேர்ந்து, 13 வாரத்தில் (3 மாதத்தில்) விடையாகிய சொற்றொடர் கண்டுபிடிக்கப்படும்...
10-15 வயதிற்கான மாணவர் கையேட்டிற்கான பாடங்கள் ஒவ்வொன்றிலும் இரகசிய தகவலும் குறிவிலக்கியும்.