அலங்காரங்கள்
உங்கள் தேவாலயத்தை குளிர்கால விந்தையுலகமாக மாற்றவும்.
உங்களால் செய்ய முடியும்!
நீங்கள் வெப்பமான காலநிலையில் வாழ்ந்து வந்தாலும் மற்றும் எந்த ஒரு உண்மையான பனியை பார்த்ததில்லை என்றாலும் கூட உங்கள் கற்பனை பயன்படுத்தலாம். வித்தியாசமான ஒரு உலகத்தில் நடப்பதை குழந்தைகள் விரும்புவர்!
உங்கள் விபிஎஸ்-சை அதி அற்புதமனதாக்க வலைதளத்தில் அதிகமான அலங்கார யுக்திகளை தேடுங்கள்!
பனி குவியலை செய்வது எப்படி
குழந்தைகள் ஒரு புது உலகத்தில் அடியெடுத்து வைப்பது போல சில எளிமையான வழிகளில் உங்கள் தேவாலயத்தையே மாற்றலாம். உங்களுக்கு தேவையானதெல்லாம் அட்டை பெட்டி, காகிதம் அல்லது வெள்ளை வர்ணத்தை கொண்டு அந்த பெட்டியை மறைக்கலாம், மற்றும் பருத்தி உருளைகள் அல்லது பஞ்சுறை நிரப்புதல் மட்டுமே. மேடையின் இரு பக்கங்ககளுக்கும் ஒவ்வொன்று செய்யவும்.

அட்டை பெட்டியிலிருந்து தொடங்கவும்.

அட்டை பெட்டியின் பக்கங்களை திறந்து தரையிலிருந்து சுவர் போல வைக்கவும்.

காகிதத்தை அட்டை பெட்டியின் முன் பக்கமாக ஒட்டலாம் அல்லது சாயம் பூசி வெள்ளையாக்கவும்.

முன்பக்கம் முழுவதையும் மூடவும் அப்போது தன் அட்டை பேட்டியின் நிறம் தெரியாது.

காகிததின் முன் கனமான பருத்தி உருளைகலையோ அல்லது பருத்தியினை நிரப்பினால் பார்க்க மிருதுவாக இருக்கும். கீழே விளிம்புகளில் இணைக்கப்படாது விட்டுவிடவே பார்க்க பனிமலை போல குவிந்து இருக்கும்

மேடையில் பயன்படுத்த போவதால் அட்டை சுவற்றின் பின்புறத்தை மறைக்க தேவையில்லை.

பருத்தியை கொண்டு சுவர் முழுவதும் மறைத்து முடிக்கவும்.

ஒரு பெரிய கனமான துணியை தரையில் பரப்பவும். பனி குவியலை செய்ய தரையில் கனமான துணியின் மேல் லேசாக வளைந்த வாக்கில் அட்டை சுவர் அமைக்கவும்.

பனிக்கட்டிப்பாறைகள் இன்னும் உண்மையான பனி போல் தோன்ற, மேடை விளிம்பின் மீது மடித்தும் தரையின் மீது பருதியின் பெரிய துண்டு அமைத்து காட்டுங்கள்.

இங்கே நாம் வெள்ளை காகிதம் அல்லது சாயம் மற்றும் கனமான துணி பருத்தி உருளைகள் என்பவற்றால் செய்த மூடப்பட்டிருக்கும் அட்டை பெட்டியில் செய்யப்பட்ட பனிக்கட்டிப்பாறையை நீங்கள் பார்த்தீர்கள். நடிகர்கள் பனிக்கட்டி பறையின் முன்னும் பின்னும் நகர்வதன் மூலம் 3D பார்ப்பது போல் இருக்க உதவும். மேடையின் ஒவ்வொரு பக்கத்திறக்கும் ஒன்றை செய்க.

மேலும் அலங்கார யோசனைகள்
அருகே பார்க்க படங்களை கிளிக் செய்யவும்.


ஒரு காகிதத்தை பல முறை மடித்து பின்னர் பக்கங்களில் இருந்து சில வடிவங்களை வெட்டுக. காகிதத்தை விரித்தால் பனித்துகள்களை பார்க்கலாம். தேவாலயத்தை சுற்றிலும் பல வடிவங்களில் செய்து தொங்க விடவும். மெல்லிய காகிதம் பயன்படுத்த எளிதானது , ஆனால் சாதாரண காகிதமும் அதே போல வேலை செய்யும்.

மரத்தில் இருக்கும் கிளைகளை கொண்டு ஒவ்வொரு மாணவரின் அழகான பெயருடன் அட்டையை செய்யுங்கள்.

ஒரு மெல்லிய அல்லது தெளிவான நூல் கொண்டு பருத்தி பந்துகளை கட்டி சரமாக வைக்கவும். பின்னர் இந்த “பனி” இழைகளை தேவாலயத்தை சுற்றிலும் தொங்க விடவும்.

காகிதத்தில் தொங்குபணி செய்து உத்துரத்தில் தொங்க விடவும்.
- பதிவிறக்கு விபிஎஸ் கைவினையின் இலக்கு

தேவாலயத்தின் நுழைவாயிலில் ஒரு பலூன் வளைவு செய்து குழந்தைகளை ஒரு குளிர்கால விந்தையுலகதில் நடப்பது போல் கற்பனை செய்து மகிழ உதவுங்கள்.

நீலம் அல்லது வெள்ளை காகிதம் அல்லது பிளாஸ்டிக் கைவினைகளை கொண்டு அரங்கினை அலங்கரிப்பதுடன் எல்லா இடங்களிலும் உதிர்பனித்துகளை தொங்கவிடுங்கள் .


மலை டியோராமா - ஒரு மலை காட்சிக்கான “டியோராமா” செய்வதன் மூலம் குழந்தைகள் முன்னேற்றம் காண அவர்களுக்கு முழுவதுமாக மேல் நோக்க உதவலாம். ஒவ்வொரு நாளின் கருப்பொருளையும் கொண்டு டியோராமாவில் பல்வேறு புள்ளிகளில் சிட்டையிடலாம்.

உங்கள் மாணவர்களை வைத்து ஒரு மலைத் தொடரை உருவாக்குங்கள் . ஒவ்வொரு மாணவனும் மலையை உருவாக்க ககிதத்தை உருட்டி கூம்பு செய்கிறார். அனைத்தையும் ஒன்றாக வைத்து பசை டேப்பு அல்லது ஒட்டு பசை மூலம் ஒட்டி நிலையாக நிற்க செய்ய கூம்பின் கீழே வெட்டி பயன்படுத்தவும். உயரமான மலைகளில் பனித்தொப்பி கிடைக்கும்.



மாணவர்கள் ‘செல்பி’ படமெடுக்க ஒரு புகைப்பட மண்டலம் அமைத்திடுக.

உங்கள் தேவாலயத்தை விபிஎஸ்ற்காக அலங்கரிக்க இந்த யோசனைகளை பயன்படுத்தவும்:
- காகித உதிர்பனித்துகள்
- விளக்குகளின் சரங்கள்
- நீலம் மற்றும் வெள்ளை பலூன்கள்
- வெள்ளை மேசை துணி
- நீண்ட குறுகிய கொடிகள்
- சுவற்றுக்கான காகிதம் மலைகள்
- வினைல் உதிர்பனித்துகள் கொண்ட நீல ஜாடிகளை

பனி சோப் - எங்களுக்கு உண்மையான பனி வேண்டும் என்றால் வாய்ப்பு இல்லை, ஆனால் நீங்கள் விளையாட பஞ்சுபோன்ற சில வெள்ளை பொருட்களை செய்ய முடியும். உங்களுக்கு ஒரு மைக்ரோவேவ் மற்றும் ஐவரி பிராண்ட் சோப் கட்டி வேண்டும் (ஐவரி மட்டுமே வேலை செய்யும்). ஒரு பெரிய மைக்ரோவேவ்-பாதுகாப்பு கொண்ட பாத்திரத்தின் மீது காகிதம் நீக்கப்பட்ட சோப்பு கட்டியை வைத்து சூடாக்கவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு பிறகு வெப்பதினால் சோப்பு பனி மேகம் போல விரிவடைவதை மாணவர்கள் பார்க்க முடியும். அதை வெளியே பயன்படுத்தும் முன் குளிரவிடவும்.
உங்கள் அலங்காரங்கள் தெளிவாக்குக
உங்கள் குளிர்கால அலங்காரங்களை கூடுதலாக மின்னச் செய்ய உதரணமாக பனி மனிதன் போல் உங்கள் அலங்காரங்களை தெளிவாக்குங்கள்
பொருட்கள்:
தண்ணீர்
3 டேபிள் ஸ்பூன் போரக்ஸ் பொடியுடன் 1 கப் தண்ணீர்
செயல்முறைகள் :
- ஒரு ஜாடி அல்லது குவளையில் கொதிக்கும் நீரை நிரப்புக, போரக்ஸ்சை சேர்த்து கலக்கவும். சிறிது போரக்ஸ் பாத்திரத்தின் கீழே தங்கியிருந்தால் பரவாயில்லை.
- பென்சில், சிறு கரண்டி அல்லது நீண்ட ஏதேனும் ஒரு பொருளில் சிறிய அலங்காரத்துடன் நூலில் சேர்த்து கட்டவும். சூடான நீர் மற்றும் போரக்ஸ் கலவையில் அந்த அலங்காரத்தை இறக்குக, பாத்திரத்தின் பக்கங்களிலோ அல்லது கீழேயோ தொடாது இருப்பதை உறுதி செய்யவும்.
- ஒரு அமைதியான இடத்தில் ஜாடியை வைத்து எதுவும் மோதாமல் இருக்க வேண்டும். அப்படியே ஒரு சில மணி நேரங்கள் இருந்த பிறகு படிகங்கள் உருவாக ஆரம்பிக்கும். மேலும் படிகங்கள் வளர ஒரு சில மணி நேரமோ அல்லது கூட ஒரே இரவோ அப்படியே விடவும். தயாரானதும், அலங்காரத்தை சுமார் ஒரு மணி நேரம் காகித துண்டில் காயவிடவும்.
- மாணவர்கள் படிகங்களை பார்க்க ஒரு பூதக்கண்ணாடி கொண்டு வரவும்!



இலவச பதிவிறக்கம்
உங்கள் விபிஎஸ்சை மிகவும் சிறப்பாக்க அதிகமான அலங்கார யோசனைகளை வலைத்தளத்தில் தேடவும்!
வினைல் பனித்துகள்கள்
உங்கள் தேவாலய ஜன்னல்களுக்கான உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பனித்துகளின் ஓட்டுபடம்! கோப்புகளிலிருந்து பதிவிறக்கி வினைல் ஓட்டுபடத்தை முன்பதிவு செய்யவும் அல்லது அவற்றை ஒட்டு காகிதத்தில் அச்சிட்டு வெட்டி பயன்படுத்தலாம்.
காகித தொங்குபனி
உங்கள் தேவாலய மேடையை அலங்கரிக்க காகித தொங்கு பனி செய்யவும்! மிகப்பெரிய தொங்கு பனி செய்ய தரமான காகிதம் அல்லது வடிவமைப்பு நகலை பயன்படுத்தவும்!
- பதிவிறக்கம் விபிஎஸ்சின் கைவினை இலக்கு ஆங்கிலம்